காதலர் தினத்தை முன்னிட்டு வாட்ஸஅப்பில் பரவும் போலி செய்தி.
. தவறான செய்திகளை அனுப்புவதன் மூலம் ஊக்குவிக்கும் பல பயனர்கள் இன்றும் உள்ளனர்
தாஜ் விடுதியில் ஏழு நாட்கள் இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை வென்று இருப்பதாக கூறுகிறது
ஏழு நாட்கள் இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை வென்று இருப்பதாக கூறுகிறது.
இன்ஸ்டன்ட் மெசேஜ் பயன்பாடான வாட்ஸ்அப்பில் போலி செய்திகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தவறான செய்திகளை அனுப்புவதன் மூலம் ஊக்குவிக்கும் பல பயனர்கள் இன்றும் உள்ளனர். இதேபோன்ற வழக்கு வெளிப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு அனுபவம் பரிசு அட்டையை தஜ் ஹோட்டல் தருவதாக ஒரு போலி செய்தி வேகமாக பகிரப்படுகிறது. நீங்களும் இந்த செய்தியின் பாசாங்கின் கீழ் வந்திருந்தால், இந்த செய்தியுடன் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இந்த செய்தி ஒரு மோசடி.
வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் தகவல் ஒன்று அதன் பயனர்கள் தாஜ் விடுதியில் ஏழு நாட்கள் இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை வென்று இருப்பதாக கூறுகிறது.
ஒருவழியாக தாஜ் ஓட்டலில் ஏழு நாட்களுக்கு இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை பெற்று இருக்கிறேன் என கூறும் தகவல் மற்றும் இணைய முகவரி வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது.
இணைய முகவரியை க்ளிக் செய்ததும், `காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் தாஜ் ஓட்டல் சார்பில் 200 பரிசு கூப்பன்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஏழு நாட்கள் எந்த தாஜ் ஓட்டலிலும் இலவசமாக தங்க முடியும். இதற்கு சரியான பரிசு பெட்டியை திறக்க வேண்டும்.' எனும் கூறும் தகவல் அடங்கிய வலைப்பக்கம் திறக்கிறது.
பின் பரிசு கூப்பனை க்ளிக் செய்த பின், பயனர்கள் பரிசை பெற குறுந்தகவலை ஐந்து க்ரூப் அல்லது 20 அக்கவுண்ட்களுக்கு அனுப்ப கோருகிறது. உண்மையில் இது மால்வேர் அடங்கிய வலைதளமாக இருக்கலாம்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து தாஜ் ஓட்டல் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், பயனர்கள் வைரல் தகவலை நம்பி வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டாம் என கூறப்பட்டு உள்ளது. அந்த வகையில் வைரல் தகவலில் உள்ள தகவல் பொய் என்பது உறுதியாகிவிட்டது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile