ஃபேஸ்புக் மெசஞ்சர் அறிமுகப்படுத்தியது வீடியோ காலுக்கு AR எபக்ட்ஸ்
பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் வீடியோ கால் மற்றும் மெசன்ஜர் ரூம்சில் குரூப் எபெக்ட்ஸ் எனும் அம்சத்தை வழங்கி இருக்கிறது.
Facebook குரூப் எபெக்ட்ஸ் ஏ.ஆர். பில்டர் மற்றும் எபெக்ட்களை வழங்குகிறது
உலகம் முழுக்க குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது
பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் வீடியோ கால் மற்றும் மெசன்ஜர் ரூம்சில் குரூப் எபெக்ட்ஸ் எனும் அம்சத்தை வழங்கி இருக்கிறது. குரூப் எபெக்ட்ஸ் ஏ.ஆர். பில்டர் மற்றும் எபெக்ட்களை வழங்குகிறது. பயனர்கள் வீடியோ கால் பேசும் போது இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இதையும் படிங்க BSNL பயனர்கள் டிசம்பர் 31 வரை இலவச SIM Card,பெறமுடியும்.
உலகம் முழுக்க குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய மெசன்ஜர் செயலியில் வீடியோ கால் அல்லது ரூம் ஸ்டார்ட் செய்து எபெக்ட்ஸ் பகுதியில் உள்ள ஸ்மைலி முகத்தை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு குரூப் எபெக்ட்ஸ் ஆப்ஷன் இருக்கும். இதையும் படிங்க இந்த தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க பாக்குறீங்களா அப்போ AMAZON யில் ஆபரில் வாங்குங்க.
மெசன்ஜர் செயலியை தொடர்ந்து விரைவில் இன்ஸ்டாகிராம் சேவையிலும் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ளும் போது குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் இயங்கும். இவை மல்டி பிளேயர் கேமிங் அனுபவத்தையும் வழங்குகிறது. முதற்கட்டமாக குரூப் எபெக்ட்ஸ் அம்சத்தில் 70-க்கும் அதிக எபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்டுள்ளபடி, Facebook Messenger பயனர்கள் 70 க்கும் மேற்பட்ட குழு விளைவுகளின் லைப்ரரியில் இருந்து தேர்வுசெய்ய முடியும், இது நீங்கள் ஹாம்பர்கரை உருவாக்க போட்டியிடும் கேம்கள், அழகான ஆரஞ்சு நரி மற்றும் பிற விளையாட்டுகளில் இருந்து தேர்வு செய்யலாம். Facebook ஏற்கனவே கதைகள் மற்றும் ரீல்களை உருவாக்குவதற்கான AR விளைவுகளை வழங்குகிறது, மேலும் இப்போது வீடியோ கால்களை மற்றும் அறைகளிலும் இந்த திறன்களைச் சேர்த்துள்ளது. குழு விளைவுகளில் ரோஸ் வேக்ஃபீல்ட் வடிவமைத்த ஒரு புதிய ப்ளோ டேன்டேலியன் விளைவு அடங்கும், இது வீடியோ அழைப்பில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் புல் தாடியை அறிமுகப்படுத்துகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile