நவம்பர் மாதத்திற்கான இணக்க அறிக்கையை WhatsApp சனிக்கிழமை வெளியிட்டது. ஐடி விதிகள் 2021க்கு இணங்க நவம்பரில் இந்தியாவில் 17,59,000 மோசமான கணக்குகளை தடை செய்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இது தவிர, தகவல் அளித்து, நவம்பர் மாதத்திலேயே 602 புகார் அறிக்கைகளைப் பெற்றதாகவும், அவற்றில் 36 இல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது
.தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் படி, நவம்பர் மாதத்திற்கான எங்கள் ஆறாவது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளோம் என்று WhatsApp அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையானது பயனர்களின் புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வாட்ஸ்அப்பின் சொந்த தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை விவரிக்கிறது.
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 படி வாட்ஸ்அப் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்திய விதிகள் மற்றும் வாட்ஸ்அப் விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அதன்படி 2021 நவம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வந்த 17,59,000 பேரின் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டன. வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 602 குற்றச்சாட்டுகள் பதிவாகின. இதில் வாட்ஸ்அப் 36 அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று 357 அக்கவுண்ட்களை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டன. அவற்றில் 36 அக்கவுண்ட்கள் 'ஆக்ஷன்' செய்யப்பட்டன.
அக்கவுண்ட் ஏற்கனவே நீக்கப்பட்டு இருத்தல் அல்லது ஏற்கனவே நீக்கப்பட்ட அக்கவுண்ட் ரீஸ்டோர் செய்யப்பட்டு இருத்தலை வாட்ஸ்அப் 'ஆக்ஷன்' என குறிப்பிடுகிறது.