60 மணி நேர பிளேபேக் தரக்கூடிய Boat Rockerz 330 Pro ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்.

Updated on 03-Dec-2021
HIGHLIGHTS

புதிய Bluetooth இயர்போன் Boat Rockerz 330 Pro ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Boat Rockerz 330 Pro விலையில் இருந்து அம்சங்கள் வரையிலான தகவல்களை உங்களுக்கு வழங்குவோம்.

இந்த இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேர பிளேபேக் வழங்கும்

Wearable brand Boat, இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக அதன் புதிய Bluetooth இயர்போன் Boat Rockerz 330 Pro ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே சார்ஜில் 60 மணிநேர இசையை முழுமையாகப் பிளேபேக் செய்வதாகக் கூறப்படும் நிறுவனத்தின் பேட்டரி ஆயுள் இது போன்ற முதல் புளூடூத் நெக்பேண்ட் இயர்போன் இதுவாகும். Boat Rockerz 330 Pro விலையில் இருந்து அம்சங்கள் வரையிலான தகவல்களை உங்களுக்கு வழங்குவோம்.

இந்தியாவை சேர்ந்த போட் நிறுவனம் புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போன் போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ என அழைக்கப்படுகிறது. இந்த இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேர பிளேபேக் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
 
மேலும் இத்தனை அளவு பேக்கப் வழங்கும் போட் நிறுவனத்தின் முதல் இயர்போன் இது ஆகும். இதன் தோற்றம் போட் ஏற்கனவே அறிமுகம் செய்த ராக்கர்ஸ் 333 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த இயர்போனில் உள்ள ஏ.எஸ்.ஏ.பி. பாஸ்ட் சார்ஜிங் வசதி பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.

மிக குறைந்த எடையில் உருவாகி இருக்கும் போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி, இன்-லைன் பிளேபேக் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது. புதிய போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ பிளாக், புளூ, ரெட் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,499 ஆகும். இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :