Boat Flash Watch ஸ்மார்ட்வாட்ச் SpO2 மற்றும் ஹார்ட் ரேட் சென்சார் வசதியுடன் அறிமுகம்.
இந்திய சந்தையில் பிளாஷ் எனும் பெயரில் புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம்
போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதி
ஸ்மார்ட்போன் அக்சஸரீ மற்றும் ஆடியோ சாதனங்களை விற்பனை செய்து பிரபலமான போட் நிறுவனம் இந்திய சந்தையில் பிளாஷ் எனும் பெயரில் புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் வாட்ச் வட்ட வடிவ எல்சிடி கலர் டிஸ்ப்ளே, மெல்லிய மெட்டாலிக் டிஸ்ப்ளே, டூயல் டோன் சிலிகான் ஸ்டிராப்களை கொண்டுள்ளது.
போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதி, நோட்டிபிகேஷன் மற்றும் 200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்களுக்கு தேவையான ஸ்டான்ட்பை வழங்குகிறது.
இதில் உள்ள சென்சார்கள் பிட்னஸ் டிராக்கிங் மற்றும் இதர பணிகளை மேற்கொள்கிறது. IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் பல்வேறு சென்சார்களை கொண்டிருக்கிறது. மேலும் இதில் 10 ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
புதிய போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ மற்றும் விவிட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 ஆகும். விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile