ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்பொழுது 10 லிருந்து 20 ஆயிரத்திற்கு பிறகு 25 ஆயிரம் பட்ஜெட் செக்மண்டிற்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த வாரம், இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அவை ரூ.25 ஆயிரம் விலையில் வருகின்றன. மோட்டோரோலா தனது புதிய மோட்டோ எட்ஜ் 40 நியோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் Vivo T2 Pro அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு போன்களும் ரூ.25 ஆயிரம் பிரிவில் அடங்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பட்ஜெட் ரூ.25 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், நீங்கள் சிறப்பான கேமரா, டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி பவர் கொண்ட போனை தேடுகிறீர்கள் என்றால், இந்த அறிக்கை உங்களுக்கானது. இந்த அறிக்கையில் டாப்-5 ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
iQOO Z7 Pro யில் மீடியாடேக் டிமான்சிட்டி 7200 5G ப்ரோசெசர் உடன் இதில் 6.78 இன்ச் FullHD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரஸ் ரேட் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜை ஆதரிக்கிறது. இது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் செகண்டரி கேமரா மற்றும் செல்ஃபிக்களுக்கான 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. iQOO Z7 Pro ஆனது 4600mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டை கொண்டுள்ளது.
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யில் நியூஸ்,மொபைல்,கேட்ஜெட் , டெலிகாம் ,கம்பேரிசன் ,டிப்ஸ் & ட்ரிக்ஸ் என பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.
Realme 11 Pro உடன் 100 மெகாபிக்சல் கேமரா, MediaTek டிமான்சிட்டி 7050 ப்ரோசெசர் 67 W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் கர்வ்ட் டிஸ்ப்ளே போன்ற பல சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஃபோனில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும், இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர், டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன. இதன் மூலம், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வரை சப்போர்ட் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் Poco X5 Pro 5G அறிமுகம் செய்யப்பட்டது, குறைந்த விலையில் இருக்கும் சிறந்த போனாக இருக்கும், இதனுடன், 120Hz ரெப்ரஸ் ரேட்டிங்குடன் கூடிய AMOLED டிஸ்ப்ளே கிடைக்கிறது. ஃபோனில் ஸ்னாப்டிராகன் 778 ப்ரோசெசர் உள்ளது, 8 ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 256 ஜிபி வரை UFS 2.2 ஸ்டோரேஜ் உள்ளது. கேமராவைப் பற்றி பேசுகையில், Poco X5 Pro 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் 5,000mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.
Vivo T2 Pro 5G கடந்த வாரம் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, Vivo T2 Pro 5G யில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இது 120 HZ ப்ரஸ் ரேட் உடன் வருகிறது, இதில் இதில் MediaTek Dimension 7200 ப்ரோசெசர் மற்றும் Android 13 OS உள்ளது. போனின் கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், இது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் 64 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, செகண்டரி கேமரா 2 மெகாபிக்சல் சென்சார் மற்றும் செல்ஃபிக்களுக்கான 16 மெகாபிக்சல் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் 4,600mAh பேட்டரி மற்றும் 66W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உள்ளது
Moto யின் புதிய போன் ஆன இந்த போனில் மீடியடேக் MediaTek டிமான்சிட்டி 7030 செயலி, 12 GB வரை ரேம், 256 GB ஸ்டோரேஜ் மற்றும் 5G கனெக்டிவிட்டி உள்ளது. ஃபோனில் 144Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 6.55 இன்ச் முழு HD பிளஸ் poLED டிஸ்ப்ளே உள்ளது. Moto Edge 40 Neo ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 68W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 13-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.