ஒரு முறை ரீச்சார்ஜ் 9 மணி நேரம் நீடிக்கக்கூடிய Asus Vivobook 13 Slate லேப்டாப் அறிமுகம்.

ஒரு முறை ரீச்சார்ஜ் 9 மணி  நேரம் நீடிக்கக்கூடிய Asus Vivobook 13 Slate  லேப்டாப் அறிமுகம்.
HIGHLIGHTS

Asus Vivobook 13 ஸ்லேட் OLED இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப் டிவி பார்ப்பவர்களுக்கு புதிவித அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

9 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளைக் கொடுக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

Asus Vivobook 13 ஸ்லேட் OLED இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தக்க 2-இன்-1 லேப்டாப்பில் 13.3-இன்ச் OLED டச்  ஸ்க்ரீன் டிஸ்பிளே உள்ளது. இது விண்டோஸ் 11ல் இயங்குகிறது. இதில் குவாட் கோர் இன்டெல் பென்டியம் சில்வர் என்6000 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. பேட்டரி பற்றி பேசுகையில், இதில் 50Whr பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளைக் கொடுக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

இந்த லேப்டாப் டிவி பார்ப்பவர்களுக்கு புதிவித அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவோபுக் 13 ஸ்லேட் OLED லேப்டாப்பில் OLED TV டால்பி விஷன் ஸ்கிரீனுடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப்பில் 13.3 இன்ச் டால்பி விஷன் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, ஆசுஸ் பென் 2.0 ஸ்டைலஸ் சப்போர்ட், 170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், டிடேச்சபிள் கீபோர்ட், இன்டல் பென்டியம் சில்வர் N6000 SoC புராசஸர் ஆகியவை தரப்பட்டுள்ளன.

இதில் வழங்கப்பட்டுள்ள 50Whr பேட்டரியில்,  30 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும். அதேபோல ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை இந்த சாதனத்தை பயன்படுத்தலாம். மேலும் டைப்-சி சார்ஜிங் போர்ட், டால்பி ஆட்டம் ஸ்பீக்கர்ஸ் ஆகியவை இதில் உள்ளன.  

மூன்று மாடல்களில் வெளிவந்துள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ.45,990-ல் இருந்து ஆரம்பமாகிறது.

ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டைலஸ், ஹோல்டர் கொண்ட லேப்டாப்பின் விலை ரூ.57,990 என்றும், அதன் 8ஜிபி வேரியண்டின் விலை ரூ.62,990 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo