அமேஸ்பிட் GTS 2 மினி நியூ வெர்ஷனை கடந்த மாதம் அறிமுகம் செய்திருந்த அமேஸ்பிட் நிறுவனம், சில வாரங்களுக்கு முன் ஜிடிஆர் 2 நியூ வெர்ஷன் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அந்நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. அந்த வகையில் GTS 2 நியூ வெர்ஷனை அடுத்த வாரம் இந்தியாவில் லாஞ்ச் செய்ய ஆயத்தமாகி வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட GTS 2 மாடலைப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்GTS 2 நியூ வெர்ஷன், பல்வேறு நிறங்களில் கிடைக்கும் வண்ணம் உள்ளது. அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் பெட்டல் பிங்க் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜூன் 5ம்தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை அமேஸ்பிட் GTS 2 நியூ வெர்ஷனில் 1.65 இன்ச் AMOLED 341PPI ஸ்கிரீன் மற்றும் curved கிளாஸ் உடன் இதன் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐ.ஒ.எஸ். 10.0 சப்போர்ட் மற்றும் 90க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது. ஹார்ட் ரேட், ஸ்டெப் கவுண்ட், கலோரி கவுண்ட் கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்லீப் மற்றும் ஸ்டிரஸ் லெவலையும் கண்காணிக்கும்.
இதுதவிர வாட்டர் ரெசிஸ்டன்ட், புளுடூத் 5.0, அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட், 6 நாட்கள் வரை நீடிக்கும் 246mAh பேட்டரி, ஜிபிஎஸ், புளுடூத் காலிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. இதன் விலை jt. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது