Apple அதன் iphone வரிசையை அறிமுகம் செய்ய சில மாதங்களே இருக்கும் நிலையில் மேலும் அதற்க்கான உற்சாகம் எப்பொழுதும் அதிக அளவில் இருக்கிறது ஆப்பிளின் வழக்கமான வெளியீட்டு அட்டவணையின்படி, புதிய ஐபோன் 16 சீரிஸ் செப்டம்பரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, டிசைன் மாற்றங்கள் முதல் ஹார்ட்வேர் அப்டேட்கள் வரை iPhone 16 வரிசையைப் பற்றி ஏராளமான வதந்திகள் மற்றும் லீக்கள் வந்தன இருப்பினும், புதிய லீக் இப்போது ஸ்டேடண்டர்ட் ஐபோன் 16 மாடல்களுக்கான குறிப்பிடத்தக்க அப்டேட் மற்றும் ப்ரோ மாடல்களுக்கு எதிர்பார்க்கப்படும் மேம்பாட்டை பரிந்துரைக்கிறது.
நமக்கு ஆப்பிலின் iPhone 15 மற்றும் 15 Plus யில் A16 யின் பயோனிக் சிப் இருப்பது தெரியும் அதுவே அதன் pro மாடலில் A17 Pro ப்ரோசெசர் இருக்கிறது அதனை தொடர்ந்து இப்போது, MacRumors யின் அறிக்கையின்படி, அனைத்து iPhone 16 மாடல்களும் A18 சிப்செட்களுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
ஆம், ஸ்டேட்டண்டர்ட் மாடல்கள் மற்றும் ப்ரோ மாடல்களுக்கு இடையே சிப்செட்களில் மாறுபாடுகள் இருக்கலாம். உதரணமாக ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் A18 சிப்பில் இயங்கக்கூடும், அதே நேரத்தில் ப்ரோ மாடல்கள் அதே சிப்செட்டின் புரோ வெர்சனை பயன்படுத்தலாம். எனவே, ஆப்பிள் ஏன் அதன் வழக்கமான அப்டேட்டின் முறையைப் பின்பற்றவில்லை? சாத்தியமான காரணங்கள் என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம்
Apple சமிபத்தில் WWDC குறிப்பாக AI இருப்பதாகவும் மற்றும் tech giant A party பற்றி தாமதமாக தான் தெரிவித்தது, இருப்பினும், ஆப்பிள் ரசிகர்கள் தங்கள் ஐபோன்களுக்கு AI அறிவிக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ஒரு குழப்பம் இருந்தது. ஐபோன்களைப் பொறுத்தவரை, A18 சிப்செட்களில் இயங்கும் மாடல்களுக்கு மட்டுமே Apple Intelligence அறிவிக்கப்பட்டது, அதாவது iPhone 15 Pro மட்டுமே இதுவரை Apple Intelligence சப்போர்ட் செய்கிறது இப்போது, அனைத்து ஐபோன் 16 மாடல்களையும் அதன் புதிய AI அம்சங்களுடன் இயக்க, ஆப்பிள் இந்த சிப்செட்டை அவற்றில் பயன்படுத்தலாம்.
AI அம்சங்களை நேரடியாக டிவைசில் கையாள Apple Intelligence க்கு அதிக ஆற்றல் கொண்ட சிப் தேவை, தற்போது, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மட்டுமே ஆப்பிள் இன்டலிஜன்ஸ் பயன்படுத்த முடியும். அனைத்து எதிர்கால ஐபோன்களிலும் அட்வான்ஸ் மெசின் லேர்னிங் மற்றும் AI வேலைகளுக்கு தேவையான சக்தி இருப்பதை ஆப்பிள் உறுதிப்படுத்த விரும்புகிறது.
இதையும் படிங்க:Redmi A3X இந்தியாவில் அறிமுகத்திற்க்கு முன்னே விலை தகவல் வெளியானது